search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி தேர்தல்"

    தமிழகத்தில் மே 19ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். #DMKCandidates #Assemblybypoll
    சென்னை:

    தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டும், பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பின்னர், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் காலமானதால், அந்த தொகுதியும் காலியானது.

    அதன்பின்னர், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.


    இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி. சண்முகையா, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் தான் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். டாக்டர் சரவணன் ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #DMKCandidates #Assemblybypoll
    ×